அஜித்தின் 'விடாமுயற்சி'படத்தின் சென்சார், ரன்னிங் டைம் தகவல்.. ரிலீஸ் எப்போது?
- IndiaGlitz, [Thursday,January 09 2025]
அஜித் நடித்த ‘விடாமுயற்சி’படத்தின் திரைப்படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல் வெளியாகி உள்ளது. அதை அடுத்து இந்த தகவல்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆக உள்ளது.
அஜித் நடித்த ‘விடாமுயற்சி’படத்தின் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில், இந்த படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத சில காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டதாக தயாரிப்பு தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இம்மாத இறுதியில் இந்த படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ‘விடாமுயற்சி’ படத்தின் திரைப்படத்தின் சென்சார் தகவல்கள் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யூஏ சான்றிதழ் அளித்துள்ளதாகவும், இந்த படத்தின் ரன்னிங் டைம் இரண்டரை மணி அதாவது 150 நிமிடங்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ‘விடாமுயற்சி’ படத்தின் திரைப்படம் ஜனவரி 26 - குடியரசு தின விருந்தாக அல்லது ஜனவரி 30 ஆம் தேதி வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
அஜித், அர்ஜூன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்பட பலர் நடித்திருக்கும் ’விடாமுயற்சி’ படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் நீரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில், அனிருத் இசையில் இந்த படம் உருவாகி உள்ளது.