close
Choose your channels

அஜித்தின் 'விடாமுயற்சி', கமலின் 'தக்லைஃப்' ரிலீஸ் தேதி இதுவா?

Sunday, September 22, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

2024 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்தே பல பிரபல நடிகர்களின் படங்கள் வெளியானது என்பதும், குறிப்பாக விஜய் நடித்த ’கோட்’ விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’ , உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.

இந்த நிலையில், அடுத்ததாக ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’, சிவகார்த்திகேயன் நடித்த ’அமரன்’, சூர்யா நடித்த ’கங்குவார்’, மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ’விடுதலை’ ஆகிய முக்கிய படங்களும் இந்த ஆண்டு வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டில் கூட சில முக்கிய திரைப்படங்கள் திரையரங்குகளுக்கு காத்திருக்கின்றன. குறிப்பாக, அஜித்தின் ‘விடாமுயற்சி’, கமல்ஹாசனின் ‘தக்லைஃப்’ பாலாவின் ‘வணங்கான்’, கார்த்தியின் ‘வா வாத்தியாரே, போன்ற படங்கள் வரும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ‘விடாமுயற்சி’ திரைப்படம் 2025 பொங்கல் திருவிழாவிற்கு வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

இதேபோல், கமல்ஹாசன் நடித்த ‘தக்லைஃப்’ திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாவதாக இருந்த நிலையில், படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளதால், இது அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வரும் என தெரிகிறது.

மொத்தத்தில், தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளதால், ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தரும் தருணங்கள் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment