2 மாத இடைவெளியில் அஜித்தின் 2 படங்கள் ரிலீசா? அடுத்தடுத்த சர்ப்ரைஸ்..!
- IndiaGlitz, [Tuesday,January 07 2025]
அஜித் கடந்த சில மாதங்களாக ’விடாமுயற்சி’ மற்றும் ’குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது இரண்டு படங்களுமே ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
’விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் எதிர்பாராத காரணத்தினால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஜனவரி கடைசியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் இந்த படம் ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக்கிய ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் தமிழ் புத்தாண்டுக்கு அதாவது ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று புதிய போஸ்டர் உடன் வெளியாகியுள்ளது.
எனவே பிப்ரவரி மற்றும் ஏப்ரல் என இரண்டு மாத இடைவெளியில் அஜித்தின் இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று கூறப்படுவதால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
ஏற்கனவே அஜித் நடித்த ’ஆரம்பம்’ மற்றும் ’வீரம்’ ஆகிய இரண்டு படங்களும் அடுத்தடுத்த இரண்டு மாத இடைவெளியில் ரிலீஸ் ஆன நிலையில் தற்போது அதே நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.