'விடாமுயற்சி' 'குட் பேட் அக்லி' ரிலீஸ் தேதிகள் மாறுகிறதா? அஜித் ரசிகர்கள் அதிருப்தி..!

  • IndiaGlitz, [Wednesday,August 28 2024]

அஜித் நடித்த 'விடாமுயற்சி’ திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என்றும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது திடீரென இந்த இரண்டு படங்களின் ரிலீஸ் தேதியும் மாற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகியுள்ள 'விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததாக கூறப்பட்ட நிலையில் இந்த படத்தை தீபாவளி அன்று வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தீபாவளி அன்று ஏற்கனவே சில படங்கள் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சூர்யாவின் ’கங்குவா’ திரைப்படமும் தீபாவளி அன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அஜித்தின் 'விடாமுயற்சி’ திரைப்படம் டிசம்பருக்கு தள்ளி போக வாய்ப்பு இருப்பதாகவும் ஒருவேளை டிசம்பரில் வெளியாகவில்லை என்றால் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிட்டு தான் ’குட் பேட் அக்லி’ திரைப்படம் அஜித்தின் பிறந்தநாளான மே ஒன்றாம் தேதி வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும் ’விடாமுயற்சி’ மற்றும் ’குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவந்தால் மட்டுமே உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அரெஸ்ட் பண்ணிருவேன்னு மிரட்டினாங்க.. பிக்பாஸ் சனம் ஷெட்டி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..!

பிக் பாஸ் போட்டியாளர் மற்றும் நடிகை சனம் ஷெட்டி இன்று காலையில் தனக்கு நேர்ந்த ஒரு அதிர்ச்சி அனுபவத்தை வீடியோவாக வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'த்ரிஷ்யம்' நடிகை ஆஷா சரத்துக்கும் பாலியல் தொல்லையா? வழக்கு போடுவேன் என மிரட்டல்..!

பிரபல மலையாள நடிகர் சித்திக் மீது சில நடிகைகள் பாலியல் புகார் கொடுத்துள்ள நிலையில் 'த்ரிஷ்யம்' நடிகையும் பாலியல் துன்பத்திற்கு ஆளாகியதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தியால் பரபரப்பு

சிவகார்த்திகேயனுக்கு இன்று விசேஷமான நாள்.. மனைவி ஆர்த்தி கூறியது என்ன தெரியுமா?

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இன்று வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு விசேஷமான நாளை அடுத்து அவரது மனைவி சமூக வலைதளத்தில் கூறிய பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் வீட்டில் விசேஷம்.. அழகிய புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவின் பிரபல குணச்சித்திர நடிகர் எம்எஸ் பாஸ்கர் வீட்டில் விசேஷம் நடந்துள்ள நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தளபதி விஜய்யின் 'கோட்'.. 3 மணி நேரத்திற்கு மேல் ரன்னிங் டைம்.. 7 சென்சார் கட்ஸ்..!

தளபதி விஜய் நடித்துள்ள 'கோட்' திரைப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 59 நிமிடங்கள் என்று ஏற்கனவே செய்தி வெளியான நிலையில் தற்போது மூன்று மணி நேரத்திற்கு