அஜித் இல்லாமல் ஆரம்பமாகிறதா 'குட் பேட் அக்லி' படப்பிடிப்பு? ஆதிக் திட்டம் என்ன?

  • IndiaGlitz, [Thursday,May 02 2024]

அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் மே 10ஆம் தேதி முதல் அவர் நடிக்கும் அடுத்த படமான ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி அஜித் முதலில் ’ விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்புக்கு தான் செல்ல போவதாகவும் ’குட் பேட் அக்லி’ படத்தில் அஜித் இல்லாத காட்சிகளை படமாக்க ஆதிக் ரவிச்சந்திரன் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் திட்டமிடப்பட்டதற்கு முன்பே மே 10ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அஜித் இல்லாத மற்ற நடிகர்களின் காட்சிகளை படமாக்க ஆதித் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் ’விடாமுயற்சி’ படப்பிடிப்புக்கு செல்லும் அஜித் அந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஜூன் மாதத்தில் தான் ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் இந்த படத்தில் நடிக்கும் நாயகி உட்பட மற்ற நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்.. கணவரின் முக்கிய வேண்டுகோள்..!

பின்னணி பாடகி உமா ரமணன் காலமானதை அடுத்து அவரது கணவர் வேண்டுகோள் விடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரீரிலீஸிலும் அஜித் , விஜய் ரசிகர்கள் மோதலா? சென்னையின் முக்கிய திரையரங்கில் பரபரப்பு..!

அஜித், விஜய் நடித்த படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனால் தியேட்டரில் பரபரப்பு ஏற்படும் என்பதும் அஜித், விஜய் ரசிகர்கள் மாறி மாறி தங்களுக்கு விருப்பமான நடிகரின் பெயர்களை கோஷம் போடும் போது

மனைவி பரிசாக கொடுத்த பைக்கில் மாஸ் காட்டும் அஜித்.. வைரல் புகைப்படம்..!

நடிகர் அஜித் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருடைய மனைவி டுகாட்டி பைக் ஒன்றை பரிசாக கொடுத்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

'தாடி நீவும் அழகை பாக்க கூடி நிக்கும் ஊரு'.. 'புஷ்பா 2' படத்தின் அசத்தலான சிங்கிள் பாடல்..!

அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' திரைப்படம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது

மீன ராசிக்கு குரு பெயர்ச்சி 2024-2025: மகிழ்ச்சியும், விழிப்புணர்வும்!

மீன ராசிக்கு குரு பெயர்ச்சி 2024-2025: மகிழ்ச்சியும், விழிப்புணர்வும்!