'விடாமுயற்சி' படத்தின் ஹீரோயின் 'காலா' நாயகியா? அப்ப த்ரிஷா என்ன ஆச்சு?

  • IndiaGlitz, [Sunday,September 03 2023]

அஜித் நடிக்க இருக்கும் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் நாயகி குறித்த தகவல் கடந்த சில வாரங்களாக இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

’விடாமுயற்சி’ திரைப்படத்தில் அஜித் ஜோடியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’காலா’ படத்தின் நாயகி ஹூமா குரோஷியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே அஜித்துடன் ‘வலிமை’ படத்தில் இணைந்து நடித்துள்ளார் என்பது தெரிந்ததே.



இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் சமீபத்தில் தெரிவித்த நிலையில், ’விடாமுயற்சி’ படப்பிடிப்பு தொடங்குவதற்கான ஆயத்த பணிகளை மகிழ் திருமேனி செய்து வருவதாக கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இந்த படம் மகிழ்திருமேனி பாணியில் ஒரு அதிரடி ஆக்சன் மற்றும் த்ரில் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.