close
Choose your channels

அஜித்தின் 'வரலாறு' நாயகி கனிகாவின் கணவர் மற்றும் மகன் புகைப்படம்!

Saturday, March 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ’வரலாறு’ சேரன் நடித்து இயக்கிய ’ஆட்டோகிராப்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை கனிகா. தற்போது கூட அவர் விக்ரமின் ’கோப்ரா’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகை கனிகா கடந்த 2008ஆம் ஆண்டு நடிகை ஜெயஸ்ரீயின் சகோதரர் ஷ்யாம் ராதாகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினீயராக இருக்கும் அவருடன் அமெரிக்காவில் செட்டிலான கனிகாவுக்கு 2010ஆம் ஆண்டு சாய்ரிஷி என்ற மகன் பிறந்தார். திருமணத்திற்கு பின் கணவர் மற்றும் மகனுடன் அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்ட கனிகா நீண்ட இடைவெளிக்குப் பின்னர், மீண்டும் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கனிகா, அவ்வப்போது தனது புகைப்படங்களையும் பதிவு செய்து வருவார். சமீபத்தில் கூட அவர் பதிவு செய்த பிகினி புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது கனிகா, தனது கணவர் மற்றும் மகனுடன் கட்டியணைத்து இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். குடும்பம்தான் எல்லாவற்றையும் விட முக்கியம் என்றும், குடும்பத்துடன் கட்டி அணைப்பதில் இருக்கும் அன்பு வேறு எதிலும் கிடையாது என்று அவர் அதில் பதிவு செய்துள்ளார். கனிகாவின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment