15 வருடங்களுக்கு முன் அஜித்துடன் நடித்த நடிகையின் பிகினி புகைப்படம் வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
15 ஆண்டுகளுக்கு முன்பு அஜீத்துடன் ஜோடியாக நடித்த நடிகை ஒருவரின் பிகினி புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
தமிழில் ’பைவ் ஸ்டார்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் சேரனின் ’ஆட்டோகிராப்’ அஜித்தின் ’வரலாறு’ மணிரத்னம் இயக்கிய ’ஓகே கண்மணி’ உள்பட பல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை கனிகா. இவர் தற்போது விஜய்சேதுபதியின் ’யாரும் ஊரே யாவரும் கேளீர்’ மற்றும் விக்ரமின் ’கோப்ரா’ ஆகிய படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்
இந்த நிலையில் கடந்த 2008ஆம் ஆண்டு ஷியாம் ராதாகிருஷ்ணன் என்ற அமெரிக்க சாப்ட்வேர் எஞ்ஜினியரை திருமணம் செய்துகொண்ட கனிகாவுக்கு 9 வயதில் ஒரு மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் கனிகா, சற்று முன்னரும் பிகினி புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்களும், கமெண்ட்ஸ்களும் குவிந்து வருகின்றன. 40 வயதை நெருங்கி உள்ள நடிகை கனிகா, இப்பொழுதும் கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த ’வரலாறு’ படத்தில் பார்த்தது போலவே இளமையாக இருக்கிறார் போன்ற கமெண்ட்ஸ்கள் அதிகம் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments