அஜித் ரசிகர்களுக்கு இன்று தரமான சம்பவம்: 'வலிமை' சூப்பர் அப்டேட்!

  • IndiaGlitz, [Wednesday,December 22 2021]

‘வலிமை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி கொண்டிருப்பதை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். விரைவில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்று இந்த படத்தின் தீம் மியூசிக் மற்றும் புரோமோ வீடியோ வெளியாக வாய்ப்பு இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது

இதனை அடுத்து அஜித் ரசிகர்களுக்கு இன்று தரமான சம்பவம் காத்திருப்பதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் பொங்கல் தினத்தில் ‘வலிமை’ திரைப்படம் வெளியாக உள்ளதை அடுத்து, அடுத்தடுத்து புரமோஷன் பணிகளை முடுக்கி விட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பதும் இதனை அடுத்து இன்று ‘வலிமை’ படத்தின் தீம் மியூசிக் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

யுவன் சங்கர் ராஜாவின் அட்டகாசமான தீம் மியூசிக் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு பணியை செய்துள்ளார் என்பதும் இந்த படத்தை போனிகபூர் பிரமாண்டமாக தயாரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.