'வலிமை' படத்தின் மாஸ் ஸ்டண்ட் வீடியோ: படக்குழுவினர் திட்டம்!

  • IndiaGlitz, [Tuesday,December 14 2021]

தல அஜித் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வலிமை’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு புரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் ‘வலிமை’ திரைப்படத்தின் டீஸர் வெளியாகி இணையதளங்கள் ஸ்தம்பிக்கும் அளவுக்கு வைரல் ஆனது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அடுத்த கட்டமாக ‘வலிமை’ படத்தின் மோட்டார் பைக் ஸ்டண்ட் வீடியோ ஒன்றை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ வெளியாகும் தேதி இன்று அல்லது நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு பணியை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.