லீக் ஆன 'வலிமை' ஸ்டில்: அஜித்தின் அம்மா வேடத்தில் இவரா?

  • IndiaGlitz, [Thursday,December 31 2020]

தல அஜித் நடித்துவரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கடந்த ஒரு வருடமாக எந்தவித அப்டேட்டும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

சமீபத்தில் அஜித்தின் மேனேஜர் தக்க சமயத்தில் ‘வலிமை’ படத்தின் அப்டேட் வெளியாகும் என்று அறிவித்து இருந்தார். இதனை அடுத்து வரும் புத்தாண்டு தினத்திலாவது ‘வலிமை’ படத்தின் அப்டேட் வரும் என்ற எதிர்பார்ப்பில் அஜித் ரசிகர்கள் உள்ளனர்

இந்த நிலையில் நேற்று இரவு முதல் திடீரென ‘வலிமை’ படத்தின் புதிய ஸ்டில் ஒன்று வைரலாகி வருகிறது. சற்று மங்கலாக இருந்தாலும் இந்த புகைப்படத்த்தில் அஜித்துடன் ‘வலிமை’படத்தில் நடித்த சில நட்சத்திரங்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே இந்த படம் அம்மா சென்டிமென்ட் கதையம்சம் கொண்டது என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த புகைப்படத்தில் அஜீத்தின் அம்மாவாக நடித்து இருப்பது பழம்பெரும் நடிகை சுமித்ரா என்று தெரியவந்துள்ளது. ’பணக்காரன்’ திரைப்படத்தில் ரஜினிக்கு அம்மாவாகவும், ‘சிங்காரவேலன்’ திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு அம்மாவாகவும் நடித்தவர் சுமித்ரா என்பதும் தற்போது அவர் தல அஜீத்துக்கும் அம்மாவாக ‘வலிமை’ படத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

ஒரே ஒரு மணி நேரம் மட்டுமே: விஜய்சேதுபதியின் புதிய முயற்சி!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அதுமட்டுமின்றி அவரது விஜய்சேதுபதி புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம்

வலிமை தயாரிப்பாளரின் அதிரடி டிவிட்… ஆனாலும் சோகம் தீராத தல ரசிகர்கள்!!!

தல அஜித் தனது ஹிட் படமான நேர்க்கொண்ட பார்வையைத் தொடர்ந்து தற்போது போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

ஆரியை ஐஸ் வைத்த கேபி அம்மா! எல்லாருக்கும் புரிஞ்சிருச்சு!

ஆரி மீது கை வைத்தால் அடுத்த வாரம் வெளியேற வேண்டியதுதான் என்பது தற்போது அனைவருக்கும் கிட்டத்தட்ட புரிந்துவிட்டது. இதனை ஹவுஸ்மேட்ஸ்களுக்கு அவர்களுடைய உறவினர்களும் அட்வைஸ் ஆக கூறி வருகின்றனர்

சிம்புவின் 'ஈஸ்வரன்' ரிலீஸ் தேதி: அட்டகாசமான போஸ்டருடன் அறிவிப்பு!

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான கிராமத்து கதையம்சம் கொண்ட திரைப்படம் 'ஈஸ்வரன்', இந்தப்படம் தேனி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மிக குறைந்த காலத்தில் படமாக்கப்பட்டது

முன்னணி நடிகருக்கு விவசாயிகள் விருது… பாராட்டி மகிழும் ரசிகர்கள்!!!

சின்னத்திரையில் இருந்து வந்து வெள்ளித்திரையில் முத்திரை பதித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன்.