உலகின் மிகப்பெரிய திரையரங்கில் 'வலிமை' படத்தை பார்க்கும் பிரபலம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் வரும் 24-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. ‘வலிமை’ படத்தின் குழுவினர் தினந்தோறும் வெளியிடும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இந்த படத்தை பார்க்க ஒவ்வொரு நாளும் ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் ‘வலிமை’ படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரின் மகளும் பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர் ‘வலிமை’ திரைப்படத்தை உலகின் மிகப்பெரிய திரையரங்கில் பார்க்க திட்டமிட்டுள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார் .
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் உள்ள லீ கிராண்ட் ரெக்ஸ் என்ற திரையரங்கம் தான் உலகில் மிகப்பெரிய திரையரங்கம். இந்த திரையரங்கில் ஒரே நேரத்தில் 2700க்கும் மேற்பட்டோர் படம் பார்க்கலாம். இங்கு பெரும்பாலும் ஹாலிவுட் படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ரஜினி, அஜித், விஜய் போன்ற பிரபலங்களின் படங்களும் ரிலீஸ் ஆகி வருகிறது. இந்த திரையரங்கில் ‘வலிமை’ படமும் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த திரையரங்கில் ‘வலிமை’ படத்தை பார்க்க திட்டமிட்டுள்ளதாக ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.
தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள ‘வலிமை’ படத்தில் அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு பணியை செய்துள்ளார் என்பதும் தெரிந்ததே.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments