தீபாவளி விருந்தாக வெளியாகிறதா 'வலிமை? அப்ப 'அண்ணாத்த?

தல அஜித் நடித்து முடித்துள்ள ‘வலிமை’ திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் ரஷ்யாவில் நடைபெற உள்ளதாகவும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன்னொரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் ‘வலிமை’ படத்தை 2021ம் ஆண்டுக்குள் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பாக பண்டிகை நேரத்தில் தான் ‘வலிமை’ வெளியாகும் என்றும் செய்திகள் வெளியானது. அந்த வகையில் ஆயுத பூஜை, தீபாவளி அல்லது கிறிஸ்மஸ் ஆகியவற்றுள் ஏதாவது ஒரு தினத்தில் ‘வலிமை’ வெளியாக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின் படி ‘வலிமை’ படம் தீபாவளிக்கு ரிலீசாவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ‘வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு அடுத்த போஸ்டரில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்த ’அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் பேட்ட, விஸ்வாசம் போல் ரஜினி, அஜித் படங்கள் மோதுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.