அஜித்தின் 'வலிமை' அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Friday,December 31 2021]

தல அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியான நிலையில் அதன் பின்னர் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது.

மேலும் இந்த படத்தை படம் பொங்கல் விருந்தாக வெளியாகும் என்று கூறப்பட்டிருந்தாலும் சரியான ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் சற்று முன் வெளியாகி உள்ளது என்பதும் இந்த படத்திற்கு யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர் என்பதும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 178 நிமிடங்கள் என்று வெளியான செய்தியை பார்த்தோம்.

இந்த நிலையில் படக்குழு சற்று முன்னர் நேற்று திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் அஜீத் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 14 முதல் 18 வரை தொடர்ச்சியாக விடுமுறை வருவதால் நேற்று திரைப்படம் வசூலில் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். எச்.வினோத் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு பணியை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'ரைட்டர்' படம் பார்த்து ரஜினிகாந்த் சொன்னது என்ன தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் புதிதாக திரையுலகுக்கு வரும் இளம் இயக்குநர்கள் இயக்கும் படங்கள் உள்பட நல்ல திரைப்படங்கள் வெளிவரும்போது மனதார அவர்களை ஊக்குவிக்கும் வகையில்

அஜித்தின் 'வலிமை' ரன்னிங் டைம் இத்தனை மணி நேரமா?

அஜித் நடித்த 'வலிமை' படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் கசிந்துள்ளது

இதெல்லாம் நான் எங்கம்மா கிட்ட கேட்டதே கிடையாது: ராஜூவின் நெகிழ்ச்சியான பேச்சு

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் தற்போது இந்த வீட்டில் இருந்த 90 நாட்களில் தாங்கள் கற்றுக் கொண்டது என்ன என்பது குறித்து கூறி வருகின்றனர் 

 'வெந்து தணிந்தது காடு' படத்தில் இணைந்த நடிகையை அறிமுகம் செய்த கெளதம் மேனன்!

சிம்பு நடிப்பில் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு' என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மும்பை உள்பட ஒரு சில பகுதிகளில் விறுவிறுப்பாக

கப்பாவை தொடர்ந்து செஞ்சூரியனில் சரித்திரம் படைத்த இந்திய அணி!

இந்த ஆண்டின் துவக்கத்தில் கப்பா மைதானத்தில் விளையாடிய