எதிர்பார்த்த தேதியில் அஜித்தின் 'வலிமை' ரிலீஸ்: அதிகாரபூர்வ அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் கடந்த பொங்கல் தினமே இந்த படம் ரிலீசாக இருந்த நிலையில் திடீரென ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் சற்று முன்னர் அஜித்தின் ‘வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த படம் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அஜித் ரசிகர்கள் இந்த தகவலை கொண்டாடி வருகின்றனர். ‘வலிமை’ திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி ரிலீஸாகும் என ஏற்கனவே எதிர்பார்த்த நிலையில் எதிர்பார்த்த தேதியிலேயே ‘வலிமை’ ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள இந்தப் படத்திற்கு ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு பணியை செய்துள்ளார் என்பதும் தெரிந்ததே.
Actions speak louder than words. The wait is well & truly over. Feel the power on 24 Feb, in cinemas worldwide. #Valimai #Valimai240222#ValimaiFromFeb24#AjithKumar #HVinoth @thisisysr @BayViewProjOffl @ZeeStudios_ @sureshchandraa @ActorKartikeya #NiravShah @humasqureshi pic.twitter.com/K6uyLlHRLl
— Boney Kapoor (@BoneyKapoor) February 2, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com