'வலிமை' ரிலீஸ் தேதி இதுவா? ஒரிரு நாளில் அதிகாரபூர்வ அறிவிப்பு!

  • IndiaGlitz, [Saturday,January 29 2022]

அஜித் நடித்த 'வலிமை’  திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆக இருந்த நிலையில் திடீரென ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு ஆகியவை காரணமாக ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதால் 'வலிமை’ உள்பட சில பெரிய படங்களின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

அந்த வகையில் திரையரங்குகளில் தற்போது 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப் இருந்தாலும் இரவு காட்சி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பதாலும், ஞாயிறு முழு ஊரடங்கு நீக்கப்பட்டு இருப்பதாலும் 'வலிமை’ திரைப் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'வலிமை’ படத்தை பிப்ரவரி 24ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் அதற்குள் திரையரங்குகளில்100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே 'வலிமை’ படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி பிப்ரவரி 24 என இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.