மீண்டும் ரஜினியை முந்துகிறாரா அஜித்?

  • IndiaGlitz, [Thursday,July 15 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அஜித்தின் ‘வலிமை’ திரைப்படமும் தீபாவளி அன்றுதான் வெளியாகும் என்றும் ’பேட்ட’, ’விஸ்வாசம்’ படங்களை எடுத்து மீண்டும் ரஜினி, அஜித் படங்கள் மோத இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் கூறி வருகின்றன

ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ’அண்ணாத்த’ திரைப்படத்தை சோலோவாக தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய வேண்டுமென திட்டமிட்டு இருப்பதாகவும் எனவே ‘வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றியமைக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து ’அண்ணாத்த’ படத்திற்கு முன்பே ‘வலிமை’ ரிலீஸ் ஆகும் என்றும், அனேகமாக அக்டோபர் 13ஆம் தேதி ஆயுதபூஜை விடுமுறையை நேரத்தில் ‘வலிமை’ திரைப்படம் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது



கடந்தமுறை அஜித்தின் ’விஸ்வாசம்’ மற்றும் ரஜினியின் ’பேட்ட’ ஆகிய படங்கள் மோதியதில் ’பேட்ட’ திரைப்படத்தை விட ’விஸ்வாசம்’ திரைப்படத்தின் வசூல் முந்தியது என்று செய்திகள் வெளியானது. ஆனால் இந்த முறை ரிலீஸில் ரஜினி படத்தை அஜித் திரைப்படம் முந்துகிறது என்று கூறப்படுகிறது.
 

More News

2 வயதில் கடத்தப்பட்ட மகன்… 24 வருடமாகத் தேடி அலையும் ஒரு தந்தையின் பாசப் போராட்டம்!

சீனாவில் 2 வயதில் கடத்தப்பட்ட தனது மகனை 24 வருடமாகப் பல இடங்களில் தேடி, கடைசியில் கண்டுபிடித்து இருக்கிறார்

தனுஷின் 'D43' படப்பிடிப்பில் இணைந்த 'மாஸ்டர்' நடிகர்!

தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கிவரும் 'D43' என்ற படத்தின் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் 'மாஸ்டர்' நடிகர் இணைந்துள்ள தகவல்

'வலிமை'யால் ஏமாந்த நடிகர் மனோபாலா: ரசிகர்கள் அலர்ட் செய்ததால் பரபரப்பு!

'வலிமை' படத்தின் அடுத்த லுக் வருவதாக ஃபேக் ஐடி செய்தி வெளி வந்ததை பார்த்து ஏமாந்த நடிகர் மனோபாலாவை ரசிகர்கள் அலர்ட் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அப்பீல் செய்யப்போகிறாரா விஜய்? சட்டவல்லுனர்களுடன் ஆலோசனை என தகவல்!

தளபதி விஜய் தான் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரிவிலக்கு கேட்டு பதிவு செய்த வழக்கில் நீதிபதி அவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்ததுடன் கடுமையாக விமர்சனம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சூர்யா-வெற்றிமாறனின் 'வாடிவாசல்' படத்தின் வேற லெவல் அப்டேட்!

சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'வாடிவாசல்' திரைப்படத்தின் வேற லெவல் அப்டேட் ஒன்று சற்றுமுன் வெளியாகியுள்ளதை அடுத்து சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில்