ஓடிடி ரிலீஸிலும் சாதனை செய்த அஜித்தின் 'வலிமை'
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த ‘வலிமை’திரைப்படம் கடந்த மாதம் 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியானது என்பதும் குறிப்பாக தமிழகத்தில் மட்டும் இந்த படம் சுமார் 1000 திரையரங்குகளில் வெளியானது என்பது தெரிந்ததே. மேலும் இந்த படம் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பாளர் போனிகபூர் அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில், தற்போது 300 கோடி ரூபாய் வசூலை நெருங்கி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று அதாவது மார்ச் 25ஆம் தேதி ஜீ5 ஓடிடியில் ‘வலிமை’படம் வெளியானது. திரையரங்குகளில் பார்க்காதவர்களும், திரையரங்கில் பார்த்த ரசிகர்களும் ‘வலிமை’திரைப்படத்தை நேற்று முதல் ஓடிடியில் பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் திரையரங்குகளில் மட்டுமின்றி ‘வலிமை’ திரைப்படம் ஓடிடியிலும் சாதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் ஓடிடியில் வெளியாகிய ஒரே நாளில் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்கள் பார்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய ஓடிடி வரலாற்றில் ஒரு மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.
Wow another Valimai record! #Ajith @BoneyKapoor #ValimaiOnZEE5 pic.twitter.com/yMJnSVrjJu
— Dhiraj Kumar (@AuthorDhiraj) March 26, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments