ஓடிடி ரிலீஸிலும் சாதனை செய்த அஜித்தின் 'வலிமை'

அஜித் நடித்த ‘வலிமை’திரைப்படம் கடந்த மாதம் 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியானது என்பதும் குறிப்பாக தமிழகத்தில் மட்டும் இந்த படம் சுமார் 1000 திரையரங்குகளில் வெளியானது என்பது தெரிந்ததே. மேலும் இந்த படம் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பாளர் போனிகபூர் அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில், தற்போது 300 கோடி ரூபாய் வசூலை நெருங்கி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று அதாவது மார்ச் 25ஆம் தேதி ஜீ5 ஓடிடியில் ‘வலிமை’படம் வெளியானது. திரையரங்குகளில் பார்க்காதவர்களும், திரையரங்கில் பார்த்த ரசிகர்களும் ‘வலிமை’திரைப்படத்தை நேற்று முதல் ஓடிடியில் பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் திரையரங்குகளில் மட்டுமின்றி ‘வலிமை’ திரைப்படம் ஓடிடியிலும் சாதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் ஓடிடியில் வெளியாகிய ஒரே நாளில் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்கள் பார்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய ஓடிடி வரலாற்றில் ஒரு மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

More News

துபாய் எக்ஸ்போவில் திரையிடப்பட்ட அஜித் படம்: கொண்டாடும் ரசிகர்கள்!

துபாய் எக்ஸ்போவில் அஜித்தின் சூப்பர் ஹிட் படம் திரையிடப்பட்டதை அடுத்து அதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

'ஆர்.ஆர்.ஆர்' வெற்றியின் நடுவே ராம்சரண் தேஜா மனைவியின் வாழ்த்து யாருக்கு தெரியுமா?

இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான 'ஆர்.ஆர்.ஆர்' என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வசூலை குவித்து வருகிறது என்பதும், இந்தப் படத்திற்கு ஏகப்பட்ட பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது

ஒரே ஒரு பிட்டு படம் நடி: அட்வைஸ் சொன்ன ரசிகருக்கு பதிலடி கொடுத்த 'குக் வித் கோமாளி' பிரபலம்!

குக் வித் கோமாளி மூலம் பிரபலமான ஒருவரிடம் ரசிகர் ஒருவர் ஒரே ஒரு பிட்டு படம் நடி என கூறியதற்கு அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

கூட்டம் கூட்டமாகத் துப்பாக்கிச் சுடக் கற்றுக்கொள்ளும் போலந்து பெண்கள்… பகீர் காரணம்!

ரஷ்யா, உக்ரைன் நாட்டைத் தொடர்ந்து அதன் அண்டை நாடான போலந்தைத் தாக்குவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகக்

திடீரென உக்ரைன் எல்லைப் பகுதிக்குச் சென்ற ஜோ பைடன்… என்ன காரணம்?

ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று உக்ரைன் எல்லைப் பகுதிக்கு