அஜித்தின் 'வலிமை' ரன்னிங் டைம் இத்தனை மணி நேரமா?

அஜித் நடித்த ‘வலிமை’ படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் கசிந்துள்ளது

அஜித் நடிப்பில், வினோத் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வலிமை’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ளது என்பது குறிபிடத்தக்கது. 

இந்த நிலையில் இந்த படம் சென்சாருக்கு சென்று உள்ளதாகவும் விரைவில் சென்சார் சான்றிதழ் கிடைக்கும் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்திகள் வெளியானது. இந்த நிலையில் சற்றுமுன் ‘வலிமை’ படத்துக்கு ’யுஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளதாகவும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 58 நிமிடங்கள் என்றும் தகவல்கள் வெளியாகிஉள்ளது. மூன்று மணி நேரத்திற்கு 2 நிமிடங்கள் மட்டுமே குறைவு என்பதால் இந்த படத்தின் நீளம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏற்கனவே சமீபத்தில் வெளியான ‘புஷ்பா’ திரைப்படமும் கிட்டத்தட்ட 3 மணி நேரம் ரன்னிங் டைம் என்பதும், ஜனவரி 7ஆம் தேதி வெளியாக கூடிய ’ஆர்.ஆர்.ஆர். திரைப்படமும் கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கும் மேலான ரன்னிங் டைம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

இதெல்லாம் நான் எங்கம்மா கிட்ட கேட்டதே கிடையாது: ராஜூவின் நெகிழ்ச்சியான பேச்சு

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் தற்போது இந்த வீட்டில் இருந்த 90 நாட்களில் தாங்கள் கற்றுக் கொண்டது என்ன என்பது குறித்து கூறி வருகின்றனர் 

 'வெந்து தணிந்தது காடு' படத்தில் இணைந்த நடிகையை அறிமுகம் செய்த கெளதம் மேனன்!

சிம்பு நடிப்பில் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு' என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மும்பை உள்பட ஒரு சில பகுதிகளில் விறுவிறுப்பாக

கப்பாவை தொடர்ந்து செஞ்சூரியனில் சரித்திரம் படைத்த இந்திய அணி!

இந்த ஆண்டின் துவக்கத்தில் கப்பா மைதானத்தில் விளையாடிய

கோவாவில் உலகப்புகழ்பெற்ற கால்பந்து வீரரின் சிலை… எதற்கு தெரியுமா?

கோவா மாநிலத்தின் தலைநகரான பானாஜியில் உலகப்புகழ்பெற்ற கால்பந்து வீரரும் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக

இளையராஜாவின் சூப்பர்ஹிட் புத்தாண்டு பாடல்: அவரே பாடிய வீடியோ வைரல்!

ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாடப்படும் போது இளையராஜா இசையில் கமலஹாசன் நடிப்பில் உருவான 'சகலகலா வல்லவன்' படத்தில் இடம்பெற்ற 'இளமை இதோ இதோ'