'முடிஞ்சா தொட்டுப்பாரு': 'வலிமை' படத்தின் மாஸ் புரமோ வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் வரும் 24ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளதை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
மேலும் கடந்த சில நாள்களாக தினந்தோறும் ‘வலிமை’ படத்தின் மாஸ் புரோமோ வீடியோக்களை தயாரிப்பாளர் போனி கபூர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார் என்பதும் அந்த வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகின்றன என்பதும் தெரிந்ததே.
அந்த வகையில் சற்று முன்னர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் அஜித்தின் ஆக்சன் காட்சிகள் மற்றும் ஹூமா குரேஷியின் ஆக்சன் காட்சிகள் உள்ளன. மேலும் இந்த வீடியோவில் உள்ள வசனத்தில், ‘வலிமை என்பது அடுத்தவரை காப்பாற்றுவதற்காக மட்டும்தான், அழிப்பதற்காக அல்ல என்றும், நல்லவன் காப்பாற்றுவான் கெட்டவன் அழிப்பான் என்றும், முடிஞ்சா தொட்டுப்பார்’ என்று அஜீத் பேசும் வசனமும் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன.
தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள ‘வலிமை’ படத்தில் அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு பணியை செய்துள்ளார் என்பதும் தெரிந்ததே.
The POWER of good vs the POWER of evil. #ValimaiIn6Days #ValimaiTamil #ValimiFDFS #ValimaiFromFeb24#AjithKumar #HVinoth @thisisysr @BayViewProjOffl @ZeeStudios_ @IVYProductions9 @innamuri8888 @Venkatupputuri @sureshchandraa @ActorKartikeya #NiravShah @humasqureshi pic.twitter.com/zfSL8OVpmx
— Boney Kapoor (@BoneyKapoor) February 18, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com