அஜித்தின் 'வலிமை' வசூல் ரூ.200 கோடியை நெருங்கிவிட்டதா?

அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் கடந்த மாதம் 24ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படத்தின் ஒன்பது நாட்களின் வசூல் ரூபாய் 200 கோடியை நெருங்கி விட்டதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

100 வருட தமிழ் சினிமா வரலாற்றில் 900க்கும் அதிகமான திரையரங்குகளில் தமிழகத்தில் வெளியான முதல் படம் என்ற பெருமையை ‘வலிமை’ பெற்றது என்பதும் இந்த படத்திற்கு ஏகப்பட்ட நெகடிவ் விமர்சனங்கள் கிடைத்தபோதிலும் குடும்ப ஆடியன்ஸ் கூட்டம் இந்த படத்திற்கு குவிந்து வருவதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் வசூல் ஐந்தே நாட்களில் 100 கோடி ரூபாயை அடைந்த நிலையில் தற்போது 9 நாட்களில் ரூபாய் 200 கோடியை நெருங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்தியாவில் மட்டுமின்றி மலேசியாவிலும் இந்த படம் இன்னும் நம்பர் ஒன் வசூலை வசூலித்து வருவதாக கூறப்படுகிறது

இதுவரை ‘வலிமை’ உலக அளவில் 197 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் இந்த படம் 200 கோடி ரூபாய் வசூலை எட்டிவிடும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் ‘வலிமை’ வசூல் குறித்த விபரங்களை தயாரிப்பு தரப்பினர் கூறும்போதுதான் இந்த படத்தின் உண்மையான வசூல் நிலவரங்கள் தெரியவரும்.