'வலிமை' படத்தின் முக்கிய அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடிப்பில், வினோத் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகிய ‘வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் பொங்கல் தினத்தில் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கிவிட்டது என்பதும் அதன் தொடர்ச்சியாக டீசர் மற்றும் பாடல்கள் வெளியான நிலையில் நேற்று இந்த படத்தின் தீம் மியூசிக் வெளியாகி இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’வலிமை’ படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது கேரள மாநில ரிலீஸ் உரிமை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ’வலிமை’ படத்தின் கேரள மாநில ரிலீஸ் உரிமையை E4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெற்றுள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஜீ ஸ்டுடியோ தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கேரளாவில் இந்த படம் மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு பணியை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
We are happy to announce our association with E4 entertainment for releasing #Valimai in Kerala.#AjithKumar @BoneyKapoor #HVinoth pic.twitter.com/C7KwBtI3xa
— Zee Studios (@ZeeStudios_) December 23, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments