அஜித்தின் 'வலிமை' அப்டேட்: போனிகபூரின் அதிகாரபூர்வ அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த படத்தின் அப்டேட்டை யாரிடம் கேட்க வேண்டும் என்று இல்லாமல் பார்க்கும் அனைவரிடமும் கேட்டு வந்ததை அடுத்து ‘வலிமை’ அப்டேட் விரைவில் வெளியாகும் என்றும் அதுவரை ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும் சமீபத்தில் அஜித் அறிக்கை விட்டிருந்தார்.
இந்த நிலையில் சற்று முன் ‘வலிமை’ படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், அதிகாரபூர்வமாக ‘வலிமை’ அப்டேட்டை வெளியிட்டுள்ளார். ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே ஒன்றாம் தேதி அஜித் பிறந்தநாளில் வெளியாகும் என்றும் அவர் அறிவித்துள்ளார். அஜித்தின் 50வது பிறந்த நாளில் அவர் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் பஸ்ட் லுக் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து சமூக வலைதளங்களில் இந்த தகவல் வைரலாகி வருகிறது.
The first look and the promotions of #Valimai will be initiated from May1st on the occasion of Mr #AjithKumar's 50th birthday #AK50@BayViewProjOffl #Vinoth #Niravshah @SureshChandraa @thisisysr @dhilipaction @DoneChannel1
— Boney Kapoor (@BoneyKapoor) March 15, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com