பர்ஸ்ட்லுக் ரிலீஸாகும் முன்பே 'வலிமை' வியாபாரம் இத்தனை கோடியா?

  • IndiaGlitz, [Monday,July 05 2021]

தல அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்பதும் இந்த படத்தின் ஒருசில காட்சிகளின் படப்பிடிப்பிற்காக விரைவில் படக்குழுவினர் வெளிநாடு செல்ல உள்ளதாகவும் வெளிவந்த தகவலை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ’வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் கூட இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில் அந்த படத்தின் வியாபாரம் மிகப்பெரிய அளவில் நடந்து முடிந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ’வலிமை’ படத்தின் திரையரங்கு உரிமை, சாட்டிலைட் உரிமை, டிஜிட்டல் உரிமை உட்பட கிட்டத்தட்ட அனைத்து வியாபாரங்களும் முடிந்துவிட்டதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது ’வலிமை’ படத்தின் மொத்த வியாபாரம் ரூபாய் 200 முதல் 225 கோடி வரை செய்யப்பட்டுள்ளதாகவும் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆகும் முன்பே ஒரு தமிழ் படம் இத்தனை கோடி வியாபாரன் ஆனது தமிழ்த்திரையுலக வரலாற்றில் இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் வியாபாரம் செய்துள்ள ’வலிமை’ படத்தின் எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மனைவி சித்தியான சோகக்கதை… ஆத்திரத்தில் காவல் துறையை நாடிய இளைஞர்!

உத்திரப்பிரதேச மாநிலம் பதாவுன் எனும் பகுதியில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் தனது தந்தையைக் காணாமல் பல ஆண்டுகளாகத் தேடியுள்ளார்.

சூர்யாவை மிரட்டுவது, பாஜக-வின் கோழைத்தனம்.....! சிபிஎம் பிரமுகர் பதிலடி....!

நியாமான கருத்துக்களை கூறி வரும் நடிகர் சூர்யாவை மிரட்டுவது பாஜகவின் கோழைத்தனம் என, சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

ஷங்கர் படத்தில் நடித்தவர் இப்போது அவரது படத்திற்கு இசையமைப்பாளரா?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் படத்தில் நடித்தவர் தற்போது அவரது படத்திற்கு இசை அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

நீட் தேர்வு குறித்து பொது விவாதத்திற்கு தயாரா? சூர்யாவுக்கு பாஜக அழைப்பு!

நீட் தேர்வு குறித்து பொது வெளியில் பொது விவாதம் நடத்த நடிகர் சூர்யா தயாரா? என பாஜக பொதுச்செயலாளர் கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சாமி வந்தவரிடம் 'வலிமை' அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள்: வைரல் வீடியோ

https://tamil.news18.com/news/entertainment/cinema-ajith-fans-asks-valimai-update-to-priest-mur-496331.html