மதுரையில் 'வலிமை' செய்த 100% சாதனை: ரசிகர்கள் ஆச்சரியம்!

  • IndiaGlitz, [Tuesday,February 08 2022]

அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ளது என்பதும், இந்த படத்திற்கான முன்பதிவு ஒரு சில பகுதிகளில் தொடங்கி விட்டது என்பதும் தெரிந்ததே. ஹாலிவுட் படத்திற்கு இணையாக ஸ்டண்ட் காட்சிகள் எடுக்கப்பட்டு உள்ளது என்பதும், இந்த படத்தின் டிரைலர் மற்றும் டீசர் மிகப் பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளது என்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு இதுவரை எந்த படத்திற்கும் இல்லாத அளவில் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் இந்த படத்தை திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் பெரும் ஆர்வத்துடன் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்று வருகின்றனர் என்று தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி மதுரையில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் அதாவது 100 சதவீத திரையரங்குகளிலும் பிப்ரவரி 24ஆம் தேதி ‘வலிமை’ திரைப்படம் தான் திரையிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒரு நடிகரின் திரைப்படம் ஒரு நகரில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் திரையிடும் சாதனையை அஜித்தின் ‘வலிமை’ பெற்று உள்ளது என்பதை அறிந்து சினிமா ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி பெரும்பாலான நகரங்களில் 90 சதவீத திரையரங்குகளில் ‘வலிமை’ திரைப்படம்தான் திரைப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து ‘வலிமை’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் மிகப்பெரிய சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் குமார், ஹூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார் என்பது எச்.வினோத் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி என பான் - இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே.
 

More News

என் பெயர் என்ன தெரியுமா? சமந்தா வெளியிட்ட க்யூட் வீடியோ வைரல்!

பிரபல நடிகை சமந்தா என்னுடைய பெயர் என்ன என்று தெரியுமா என்று வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

'ஜெய்பீம்' படத்திற்கு ஆஸ்கார் உறுதி: சொன்ன உலக பிரபலம் யார் தெரியுமா?

சூர்யா நடிப்பில் உருவான 'ஜெய்பீம்' திரைப்படம் ஆஸ்கார் போட்டிக்கு செல்வது உறுதி என சர்வதேச பிரபலம் ஒருவர் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சரத்குமார் - ராஜேஷ் எம் செல்வா இணைந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

 நடிகர் சரத்குமார் நடிப்பில் இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் உருவான 'இரை' என்ற தொடரின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ரிலீசுக்கு முன்பே லாபத்தை நோக்கி செல்லும் 'எஃப்.ஐ.ஆர்': ஆச்சரியமான தகவல்

விஷ்ணு விஷால் நடித்த 'எஃப்.ஐ.ஆர்' திரைப்படம் வரும் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே.

சிம்பு மாதிரி எல்லோருக்கும் தைரியம் வருமா? ஓப்பனாக புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகர்!

தமிழ், தெலுங்கு சினிமாவில் வரவேற்பு பெற்ற நடிகராக இருந்துவரும்