'துணிவு' டிரைலர் ரன்னிங் டைம் இவ்வளவா? அஜித் ரசிகர்களுக்கு செம விருந்து

  • IndiaGlitz, [Saturday,December 31 2022]

அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படத்தின் டிரைலர் இன்று இரவு ஏழு மணிக்கு வெளியாக இருக்கும் நிலையில் இந்த ட்ரெய்லரில் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படம் வரும் ஜனவரி மாதம் 12ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்று இரவு 7 மணிக்கு இந்த படத்தின் ட்ரைலர் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த ட்ரெய்லர் 2 நிமிடம் 18 விநாடிகள் என்றும் ஒவ்வொரு காட்சியிலும் அதிரடி பஞ்ச் வசனங்கள் மற்றும் ஆக்சன் காட்சிகள் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த ட்ரெய்லரில் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ’துணிவு’ படத்தில் நடித்த 8 முக்கிய கேரக்டர்களின் போஸ்டர் நேற்று வெளியான நிலையில் அஜித்தின் கேரக்டரை மட்டும் படக்குழுவினர் சஸ்பென்ஸாக வைத்துள்ளனர். இந்த நிலையில் இன்றைய ட்ரெய்லரில் அவரது கேரக்டர் என்ன என்பதும் தெரிந்துவிடும். இந்த நிலையில் அஜித், அந்தோனி என்ற கேரக்டரில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

இன்று இரவு 7 மணிக்கு இணையதளங்களில் டிரெய்லர் வெளியானாலும் உலகம் முழுவதும் புர்ஜ் கலீபா, டைம்ஸ் ஸ்கொயர் போன்ற முக்கிய இடங்களில் இந்த டிரைலரை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுவதால் இன்று அஜித்தின் ’துணிவு’ திருவிழா உலகம் முழுவதும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

'வாரிசு' டிரைலர் புத்தாண்டில் இல்லையா? விஜய் ரசிகர்கள் அதிருப்தி!

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படத்தின் டிரைலர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாக இருக்கும் நிலையில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு அல்லது நாளை புத்தாண்டு தினத்தில் விஜய் நடித்த 'வாரிசு' படத்தின் டிரைலர்

சிம்புவின் 'பத்து தல' ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

 சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்த 'பத்து தல' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த ஆண்டின் கடைசி வொர்க் -அவுட்: ஐஸ்வர்யா ரஜினியின் வேற லெவல் வீடியோ!

2022ஆம் ஆண்டு இன்றுடன் விடைபெறும் நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த ஆண்டின் கடைசி வொர்க் - அவுட் என பதிவு செய்துள்ள வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

எஸ்.எஸ்.ராஜமெளலி - மகேஷ்பாபு படம் எத்தனை பாகங்கள்? ஆச்சரிய தகவல்

பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் உருவான 'ஆர்.ஆர்.ஆர்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் சுமார் 1000 கோடி

'துணிவு' டிரைலர் தினம்.. அஜித்தை அசத்தப்போகும் லைகா!

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று இரவு ஏழு மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக