'துணிவு' சக்சஸ் மீட்.. அஜித் வரமாட்டார் தெரியும், இவரையும் காணுமே..!

  • IndiaGlitz, [Thursday,January 19 2023]

அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படம் கடந்த 11ஆம் தேதி பொங்கல் விருந்தாக உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியானது என்பதும், பாசிட்டிவ் விமர்சனம் காரணமாக இந்த படம் நல்ல வசூலை குவித்து வருகிறது என்பதும் தெரிந்ததே.

வங்கிகளில் நடக்கும் முறைகேடுகள், வாடிக்கையாளர்களின் பணம் வங்கிகளால் எப்படி சுரண்டப்படுகிறது என்பதை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக இந்த படம் உள்ளது என்பது தான் பெரும்பாலான விமர்சனமாக இருப்பதால் ஒவ்வொரு முதலீட்டாளரும் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் ’துணிவு’ திரைப்படம் ரூ.200 கோடியை தாண்டி வசூல் செய்து வரும் நிலையில் இந்த படத்தின் வெற்றியை படக்குழுவினர் நேற்று கொண்டாடினர். இந்த சக்சஸ் மீட்டில் இயக்குனர் எச் வினோத், தர்ஷன், ஜிஎம் குமார் உள்பட இந்த படத்தில் பணிபுரிந்த பலரும் இருக்கும் வெற்றி விழாவின் குரூப் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

புரோமோஷன் விழாக்கள், வெற்றி விழாக்கள் உள்பட எதிலும் அஜித் கலந்து கொள்ள மாட்டார் என்பது தெரிந்ததே. ஆனால் இந்த சக்சஸ் மீட்டில் மஞ்சுவாரியார் கலந்து கொண்டு இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த குரூப் புகைப்படத்தில் அவர் இல்லாதது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

More News

வைகைப்புயல் வடிவேலு வீட்டில் நடந்த சோக நிகழ்வு: திரையுலக பிரபலங்கள் இரங்கல்!

தமிழ் திரை உலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான வைகைப்புயல் வடிவேலு வீட்டில் நிகழ்ந்த சோக நிகழ்வு காரணமாக திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

'ஜெயிலரை அடுத்து சன் பிக்சர்ஸ் அடுத்த படத்தின் ஹீரோ.. அதிகாரபூர்வ அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்' என்ற திரைப்படத்தை பிரமாண்டமாக தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

ஓடிடியில் வெளியாகும் ஹன்சிகாவின் திருமண வீடியோ: ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்

சமீபத்தில் நடிகை ஹன்சிகாவுக்கு திருமணமான நிலையில் அவரது திருமண வீடியோ ஹாட்ஸ்டாரில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓடும் பேருந்தில் 'ரஞ்சிதமே' பாடலுக்கு செம டான்ஸ் ஆடிய சரத்குமார்... வரலட்சுமி பகிர்ந்த வீடியோ

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தில் இடம் பெற்ற 'ரஞ்சிதமே' என்ற பாடலுக்கு சரத்குமார் ஓடும் பேருந்தில் செம டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

கமல்ஹாசனின் அடுத்த படத்தில் ஷாருக்கான்? மேலும் சில ஆச்சரியங்கள்...!

 கமல்ஹாசனின் அடுத்த திரைப்படத்தில் ஷாருக்கான் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஒரு முக்கிய பிரமுகர் அந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும்