அஜித்தின் 'துணிவு' ரன்னிங் டைம் இவ்வளவு தானா? ரசிகர்கள் ஆச்சரியம்!

  • IndiaGlitz, [Friday,December 23 2022]

அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதும் இந்த படம் பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் தீவிரமாக உள்ளனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ‘துணிவு’ படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ‘துணிவு’ திரை படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 27 நிமிடங்கள் என்றும் அதாவது 147 நிமிடங்கள் மட்டுமே என்றும் தகவல்கள் கசிந்துள்ளன. இந்த ரன்னிங் டைமில் ஓரிரு நிமிடங்கள் வேண்டுமானால் மாறலாம் என்றும் இதுதான் இறுதி ரன்னிங் டைம் என்றும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் கசிந்துள்ளது.

அஜித் நடித்த முந்தைய திரைப்படமான ’வலிமை’ திரைப்படத்தின் ரன்னிங் டைம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் அதாவது 2 மணி நேரம் 58 நிமிடங்கள் இருந்த நிலையில் ‘துணிவு’ திரைப்படம் அந்த படத்தில் இருந்து கிட்டத்தட்ட அரை மணி நேரம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் அதே நேரத்தில் ஒரு அதிரடி ஆக்ஷன் படத்திற்கான சரியான ரன்னிங் டைம் தான் ‘துணிவு’ படத்தின் ரன்னிங் டைம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.