'துணிவு' படத்தின் 'சில்லா சில்லா' பாடல்.. வைரலாகும் செம போஸ்டர்!

அஜித் நடித்து முடித்துள்ள ’துணிவு’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் உள்பட போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்தோம். குறிப்பாக அஜித் மற்றும் மஞ்சு வாரியர் டப்பிங் செய்த புகைப்படங்கள் இணையதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலானது.

இந்த நிலையில் ’துணிவு’ திரைப்படத்தில் ‘சில்லா சில்லா’ என்ற பாடல் இடம்பெற்றுள்ளதாகவும் இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியதாகவும் ’துணிவு’ படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் அறிவித்திருந்தார். மேலும் அவர் அனிருத்துடன் இணைந்து எடுத்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலானது.

இந்த நிலையில் ’துணிவு’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘சில்லா சில்லா’ பாடல் மிக விரைவில் வெளியாக இருப்பதாக தற்போது போஸ்டர் ஒன்று வெளியாகி அஜித் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கலர்ஃபுல் போஸ்டரில் அஜித் வேற லெவல் டான்ஸ் ஆடும் காட்சி உள்ளது. அனேகமாக இந்த பாடல் ’வேதாளம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’ஆலுமா டோலுமா’ பாடலுக்கு இணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்பதை இந்த போஸ்டர் மீண்டும் உறுதி செய்துள்ளது. அஜித், மஞ்சுவாரியர், வீரா, ஜான் கொகைன், அமீர், பாவனி ரெட்டி உள்பட பலர் நடித்த இந்தப் படத்தை எச்.வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.