சீண்டுனா சிரிப்பவன் சுயவழி நடப்பவன்: 'துணிவு' படத்தின் கேங்ஸ்டா பாடல்

  • IndiaGlitz, [Sunday,December 25 2022]

அஜித் நடித்துள்ள ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே

மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற அனிருத் பாடிய ‘சில்லா சில்லா’ மற்றும் வைசாக், மஞ்சுவாரியர் பாடிய ‘காசேதான் கடவுளடா’ ஆகிய இரண்டு பாடல்களும் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலானது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தில் இடம்பெற்ற ’கேங்ஸ்டா’ என்ற பாடல் வெளியாகி உள்ளது. விவேகா மற்றும் சபீர் சுல்தான் எழுதிய இந்த பாடலை ஜிப்ரான் மற்றும் சபீர் சுல்தான் இணைந்து பாடியுள்ளனர். ஜிப்ரான் கம்போஸ் செய்த இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

இந்த பாடலில் உள்ள வரிகள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் மனதில் இடம் பெற்றுவிட்ட நிலையில் தற்போது இந்த பாடலை வீடியோவாக பார்க்கும்போது ஆக்ரோஷமாக உள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை எச். வினோத் இயக்கியுள்ளார். இந்த படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.