'வாரிசு', 'துணிவு' ஒரே நாளில் ரிலீஸா? அடுத்தடுத்த நாளில் ரிலீஸா?

  • IndiaGlitz, [Wednesday,December 14 2022]

விஜய் நடித்த ’வாரிசு’ மற்றும் அஜித் நடித்த ’துணிவு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் திருநாளில் வெளியாகவிருப்பது உறுதி செய்யப்பட்ட போதிலும் இன்னும் சரியான ரிலீஸ் தேதி இரு தரப்பிலும் அறிவிக்கப்படவில்லை என்பது தெரிந்ததே.

’வாரிசு’ மற்றும் ’துணிவு’ ஆகிய இரு படங்களின் தரப்பினர்கள் இதுகுறித்து கூறியபோது சென்சார் சான்றிதழ் பெற்ற பிறகே ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

இருப்பினும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வெளியான தகவலின்படி ’வாரிசு’ திரைப்படம் ஜனவரி 12-ஆம் தேதியும் ’துணிவு’ திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ஒரு சிலர் வியாழக்கிழமை சென்டிமென்ட் படி ’துணிவு’ திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி கண்டிப்பாக வெளியாகும் என்றும் இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாக தான் அதிக வாய்ப்பிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

வெளிநாட்டு விநியோகிஸ்தர்களை பொருத்தவரை அவர்களுக்கு ’வாரிசு’ மற்றும் ’துணிவு’ ஆகிய இரண்டு படங்களுமே ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என்றுதான் கூறப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதே நேரத்தில் இரு படத்தின் குழுவினர்களும் அதிகாரபூர்வமாக ரிலீஸ் தேதியை அறிவித்தால் மட்டுமே ’துணிவு’ மற்றும் ‘வாரிசு’ ஒரே நாளில் ரிலீஸ் ஆகுமா? அல்லது அடுத்தடுத்த நாளில் ரிலீஸ் ஆகுமா? என்பது தெரியவரும்.

More News

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகருடன் டூயட் பாடும் லைலா.. க்யூட் வீடியோ

 சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' என்ற சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நடிகருடன் நடிகை லைலா டூயட் பாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில்

'கிளம்பு கிளம்பு'.. அமுதவாணனிடம் ஆவேசமாக மோதும் மைனா!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 65 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று 66வது நாள் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. பிக்பாஸ் சீசன் 6 இறுதிகட்டத்தை நெருங்கும் நிலையில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும்

விஜய் அணிந்துள்ள செருப்பின் விலை இவ்வளவா? நெட்டிசன்கள் எதை ஆய்வு செய்திருக்கிறார்கள் பாருங்கள்?

நேற்று தளபதி விஜய், விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளை சந்தித்து நிலையில் நேற்றைய சந்திப்பின் போது அவர் அணிந்திருந்த செருப்பு விலை குறித்து நெட்டிசன்கள் ஆய்வு செய்து சமூக வலைத்தளத்தில்

சுபயோக சுபதினத்தில் பதவியேற்பு விழா, இதுதான் பகுத்தறிவா? உதயநிதி பதவியேற்பு குறித்து தமிழ் நடிகை கேள்வி!

சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ மற்றும் நடிகர் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவி ஏற்க உள்ளார் என்பதும் அதற்கான ஏற்பாடுகள் முழு அளவில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன

'அவ்வை சண்முகி' படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமா இவர்? பிகினி உடையில் தாராள கிளாமர்!

உலக நாயகன் கமல்ஹாசன், மீனா நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான 'அவ்வை சண்முகி' படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் அன் அலெக்ஸியா தற்போது இளம் கன்னியாக கிளாமர்