போனிகபூரை அடுத்து மீண்டும் பிரபல நிறுவனத்துடன் இணைகிறாரா அஜித்?

  • IndiaGlitz, [Friday,July 30 2021]

தல அஜித் நடித்து வரும் 60வது திரைப்படமான ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில், அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த படமான ’தல 61’ படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தான் என்றும் அந்த படத்தையும் இயக்குனர் எச்.வினோத் தான் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அஜித், போனிகபூர், எச். வினோத் ஆகிய மூவர் கூட்டணி மூன்றாவது முறையாக இணைகிறது என்பது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ’தல 62’ திரைப்படத்தை தயாரிக்கும் நிறுவனம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அஜித் நடிப்பில் வெளியான ‘விவேகம்’ மற்றும் ‘விஸ்வாசம்’ ஆகிய படங்களை தயாரித்த சத்யஜோதி நிறுவனம் தான் ’தல 62’ படத்தை தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் இயக்குனர் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் விரைவில் அது குறித்த தகவல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

எனவே மீண்டும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துடன் தல அஜித் இணைய உள்ளது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தற்போது தனுஷின் ‘மாறன்’, ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ‘சிவகுமாரின் சபதம்’ மற்றும் பாலாஜி மோகன் இயக்கும் திரைப்படங்களை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.