அஜித் படத்தின் 7வது வருட வெற்றி கொண்டாட்டம்: பிரபல நடிகர் பகிர்ந்த புகைப்படங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த திரைப்படத்தின் 7வது ஆண்டு வெற்றி கொண்டாட்டத்தை படக்குழுவினர் கொண்டாடிய நிலையில் இந்த கொண்டாட்டம் குறித்த புகைப்படங்களை பிரபல நடிகர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
அஜித், த்ரிஷா, அனுஷ்கா ஷெட்டி, அருண்விஜய் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான ’என்னை அறிந்தால்’ திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி வெளியானது. ரூபாய் 50 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் ரூபாய் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’என்னை அறிந்தால்’ படம் ரிலீசாகி இன்றோடு ஏழு வருடங்களாக ஆனதை அடுத்து படக்குழுவினர் சிறப்பு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். இதில் இயக்குனர் கவுதம் மேனன், நடிகர் அருண் விஜய் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். கௌதம்மேனன் கேக் வெட்ட படக்குழுவினர் கைதட்டி இந்த விழாவை கொண்டாடினர். இது குறித்த புகைப்படங்களை நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் அளித்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
’என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் விக்டர் என்ற கேரக்டரில் வில்லனாக மிரட்டிய அருண் விஜய்க்கு இந்த படத்திற்கு பின்னர்தான் தமிழ் திரையுலகில் வாய்ப்புகள் குவிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
7 years!!❤ Celebrating the birth of #Victor with the creator @menongautham himself????... Humbled with all your love through all these years????#AjithKumar sir!!????❤#7YearsOfYennaiArindhaal pic.twitter.com/IKnwGn92hY
— ArunVijay (@arunvijayno1) February 5, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com