close
Choose your channels

'தளபதி 68' படத்தில் திடீர் திருப்பம்.. அஜித்தின் சூப்பர் ஹிட் இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய்?

Monday, May 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் 67 வது திரைப்படம் ‘லியோ’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் விரைவில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக விஜய் நடிக்கும் ’தளபதி 68’ படத்தின் தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன என்பதும் இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் இயக்க இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக ’தளபதி 68’ திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் விஜய்யை சந்தித்து வெங்கட் பிரபு கதை கூறியதாகவும் அந்த கதையில் ஒரு மாஸ் ஆக்சன் ஹீரோவுக்கு தேவையான அனைத்து அம்சமும் இருப்பதால் அந்த படத்தில் நடிக்க விஜய் ஒப்புக்கொண்டதாகவும் இதுதான் ’தளபதி 68’ படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது

இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் அஜித்தின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான ’மங்காத்தா’ படத்தை இயக்கிய இயக்குனர் வெங்கட் பிரபு முதல் முதலாக விஜய் படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ’மங்காத்தா’ படத்தை பார்த்த விஜய், அர்ஜுன் கேரக்டரில் தான் நடித்திருக்கலாம் என்று தனது ஆதங்கத்தை வெங்கட் பிரபுவிடம் தெரிவித்ததாக கூறப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment