பிரமாண்டமான பைக்கர் சிலை முன் அஜித்.. ஷாலினி வெளியிட்ட மாஸ் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Friday,August 04 2023]

நடிகர் அஜித் சமீபத்தில் டென்மார்க், நார்வே உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் பைக்கில் பயணம் செய்தார் என்பதும், அதன் பின் சமீபத்தில் அவர் சென்னை திரும்பினார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் வெளிநாட்டில் பைக் பயணம் செய்த புகைப்படங்களை அவ்வப்போது அஜித்தின் மனைவி ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வரும் நிலையில் தற்போது நார்வேயில் அஜித் இருந்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தின் பின்னணியில் பிரம்மாண்டமான ஒரு பைக்கர் சிலை இருக்கும் நிலையில் அந்த சிலைக்கு முன் அஜித் மற்றும் அவரது குழுவினர்கள் உள்ளனர். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் ’விடாமுயற்சி’ படத்தின் எந்த அப்டேட்டும் வராத நிலையில் அவ்வப்போது அஜித்தின் பைக் பயணம் குறித்த புகைப்படங்கள் வந்து கொண்டிருப்பது அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் இதே போன்ற பல புகைப்படங்களை ஷாலினி வெளியிட வேண்டும் என ரசிகர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் அஜித் நடிக்க இருக்கும் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க இருப்பதாகவும் அதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.