close
Choose your channels

'தல 59' படத்தின் இயக்குனர் குறித்த மாஸ் தகவல்

Tuesday, January 30, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக தல அஜித் இணைந்த 'விசுவாசம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரியில் தொடங்கவுள்ளது என்பதையும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் முடிவடையவுள்ளது என்பதையும் இந்த படம் அஜித் ரசிகர்களின் தீபாவளி விருந்தாக வெளிவரவுள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் சற்றுமுன் வெளிவந்த தகவலின்படி அஜித்தின் அடுத்த படமான 'தல 59' படத்தை விஷ்ணுவர்தன் இயக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே பில்லா மற்றும் ஆரம்பம் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இந்த கூட்டணி மீண்டும் இணைவதால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும் இயக்குனர் விஷ்ணுவர்தன் சோழப்பேரரசு குறித்து பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களுடன் ஆய்வு செய்து திரைக்கதை அமைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் அஜித்-விஷ்ணுவர்தன் இணையும் இந்த படம் சரித்திர படமாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment