அஜித்தின் முறுக்குமீசை கெட்டப்: இணையத்தில் வைரல்

  • IndiaGlitz, [Tuesday,October 08 2019]

அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அதே படத்தின் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள அடுத்த படமான ’தல 60’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இந்த படத்திற்காக தல அஜித் வித்தியாசமான கெட்டப்பில் வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பதை சமீபத்தில் விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இருந்து தெரியவந்தது.

இதனை அடுத்து தற்போது அஜித்தின் புதிய தோற்றம் கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் அஜித் முறுக்கு மீசையுடன் உள்ளார். ‘தல 60’ படத்தில் அஜித் போலீஸ் கேரக்டரில் நடிக்கவுள்ள நிலையில் இந்த முறுக்குமீசை கெட்டப் போலீஸ் கேரக்டருக்கு பொருத்தமாகவும் கம்பீரமாகவும் இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஏற்கனவே அஜித் இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசமான கெட்டப்பில் தோன்றுவார் என்று செய்திகள் வெளியாகி நிலையில் அதனை நிரூபிக்கும் அளவில் இந்த புகைப்படம் உள்ளது.

‘தல 60 படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் தொடங்கும் என்றும் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படம் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
 

More News

சாகிறதா இருந்தாலும் சண்டபோட்டுட்டு சாகணும்: கார்த்தியின் 'கைதி' டிரைலர்

ஒருபக்கம் ரூ.800 கோடி சரக்கை போலீஸிடம் பறிகொடுத்துவிட்டு தவிக்கும் கும்பல், இன்னொரு பக்கம் அந்த சரக்கை கடத்தும் கைதி கார்த்தி, இவர்களுக்கு நடுவே போலீஸ் என மும்முனை போராட்டத்தின் கதை

போட்றா வெடியை: பிகில் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தளபதி விஜய், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில், ஏஆர் ரஹ்மான் இசையில், அட்லி இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி

பிரபுதேவாவின் அடுத்த படத்திற்கு ஆச்சரியமான டைட்டில்

நடிகர், இயக்குனர் , நடன இயக்குனர் பிரபுதேவா நடிப்பில் இந்த ஆண்டு 'சார்லி சாப்ளின் 2', 'தேவி 2', ஆகிய திரைப்படங்கள் வெளியான நிலையில் தற்போது அவர் 'யங் மங் சங்'உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

'தளபதி 64' படப்பிடிப்பில் விஜய்: ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவிருக்கும் நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படமான 'தளபதி 64' படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது

கொடுத்த வாக்குறுதியை மூன்றே மாதங்களில் நிறைவேற்றிய ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சமீபத்தில் கலைஞானம் அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டபோது, 'கலைஞானம் அவர்கள் வாடகை வீட்டில் வசிப்பது தனக்கு தெரியாது