'நேர் கொண்ட பார்வை' படத்தின் புத்திசாலித்தனமான ரிலீஸ் தேதி!

  • IndiaGlitz, [Monday,July 15 2019]

அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை அறிவிக்கவிருப்பதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்திருந்தார் என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே இன்று காலை பார்த்தோம். இந்த நிலையில் சற்றுமுன் போனிகபூர் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

'நேர் கொண்ட பார்வை' வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 12ஆம் தேதி திங்கட்கிழமை பக்ரித் மற்றும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விடுமுறைகள் வருவதால் மீண்டும் ஒரு நீண்ட விடுமுறை தினத்தில் அஜித் படம் ரிலீஸ் ஆகிறது. எனவே 'விஸ்வாசம்' படத்திற்கு இணையான ஓப்பனிங் வசூலை இந்த படமும் பெற வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

எச்.வினோத் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் அஜித், வித்யாபாலன், ஷராதா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடச்சலம், ஆண்ட்ரியா தரங், பிரகாஷ்ராஜ், மஹேஷ் மஞ்சுரேக்கர், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். நீரவ்ஷா ஒளிப்பதிவில் கோகுல் சந்திரன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது
 

More News

அரைவேக்காட்டுத்தனமாக பேசுகிறார் சூர்யா: அமைச்சர் கடம்பூர் ராஜூ காட்டம்

நடிகர் சூர்யா நேற்று புதிய கல்விக்கொள்கை குறித்து மத்திய, மாநில அரசுகளை காட்டமாக விமர்சித்த நிலையில் ஏற்கனவே அவரை பாஜக தலைவர்களான எச்.ராஜா மற்றும் தமிழிசை செளந்திரராஜன்

வடசென்னை வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தனுஷ்!

தனுஷ் நடித்த 'வடசென்னை திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் ஏற்கனவே திட்டமிட்டுள்ளன

அபிராமி சொன்ன 'ஐ லவ் யூ': யாருக்கு தெரியுமா?

பிக்பாஸ் வீட்டில் சண்டைக்கும் காதலுக்கும் பஞ்சமிருக்காது என்பது அனைவரும் அறிந்ததே. வனிதா வீட்டை விட்டு சென்றாலும் சண்டையின் அளவு குறையுமே தவிர தினமும் ஒரு சண்டையாவது பார்வையாளர்கள் பார்க்கலாம்

ராஜராஜ சோழன் ஆட்சியை ரஜினிகாந்த் அமைப்பார்: அர்ஜூன் சம்பத்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரும் சட்டமன்ற தேர்தலில் புதிய கட்சி ஆரம்பித்து அரசியலில் நுழைவார் என்றும் வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த்-ஸ்டாலின் என்ற இரு முனை போட்டி மட்டுமே

விஜய்யின் 'பிகில்' படத்தில் இணையும் பிரபல காமெடி நடிகர்!

விஜய் நடித்து வரும் 'பிகில்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே யோகிபாபு, விவேக் ஆகிய இரண்டு காமெடி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.