சீனாவில் ரிலீஸ் ஆகுமா அஜித்தின் 'நேர் கொண்ட பார்வை'?

  • IndiaGlitz, [Monday,July 22 2019]

அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது

இந்த நிலையில் இந்த படத்தை சீனாவிலும் வெளியிட தயாரிப்பாளர் போனி கபூர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே போனிகபூர் தயாரிப்பில் ஸ்ரீதேவி நடித்த 'மாம்' திரைப்படம் சீனாவில் வெளியாகியுள்ளது என்பதும் இந்த படம் சீனாவில் 16 மில்லியன் டாலர் வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இதுகுறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்த போனிகபூர், 'சீனாவில் நல்ல கருத்துக்கள் கொண்ட திரைப்படத்திற்கு வரவேற்பு இருக்கும் என்றும், 'நேர் கொண்ட பார்வை' படத்தின் கதை உலகம் முழுவதிலும் உள்ள பெண்களுக்கும் பொருந்தும் என்பதால் இந்த படத்தை சீனாவில் ரிலீஸ் செய்ய முயற்சிக்கவுள்ளதாகவும், ஆகஸ்ட் 8ஆம் தேதி இந்தியாவில் ரிலீஸ் செய்தபின்னர், சீன ரிலீஸ் குறித்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் போனிகபூர் தெரிவித்தார்.

ஏற்கனவே ரஜினியின் '2.0' திரைப்படத்தை சீனாவில் ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது அஜித்தின் நேர் கொண்ட பார்வை' திரைப்படமும் சீனாவில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

படங்களில் மட்டுமே புரட்சிகரமான கருத்துக்கள்: ஷங்கரை கடுமையாக சாடிய சீமான்

நடிகர் சூர்யாவின் புதிய கல்விக்கொள்கை குறித்த கருத்துக்கு அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள் என பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் நேற்று இதுகுறித்து கருத்து கூறிய

இயக்குனர் சங்கத்தின் தலைவர் யார்? தேர்தல் முடிவு

தமிழ் திரைப்பட இயக்குனர் சங்க தலைவராக கடந்த சில வாரங்களுக்கு முன் பாரதிராஜா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து தலைவர்

விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தில் பிரபல இளம் நடிகை!

விக்ரம் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான 'கடாரம் கொண்டான்' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் நிலையில் அவர் நடிக்கவுள்ள

சூர்யாவுக்கு பதில் நான் பேசியிருந்தால்? காப்பான்' விழாவில் ரஜினிகாந்த் பேச்சு

சூர்யா, ஆர்யா, சாயிஷா, மோகன்லால் நடிப்பில் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும்

மேற்கு இந்திய தீவுகள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு:  தல தோனி மிஸ்ஸிங் 

இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள் நாடுகளுக்கு சென்று அடுத்த மாதம் டி20, ஒருநாள் போட்டி, மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.