'நேர் கொண்ட பார்வை' அமெரிக்க ரிலீஸ் குறித்த முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Monday,July 29 2019]

அஜீத் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் அமெரிக்க ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது

இந்தப் படத்தை அமெரிக்காவில் ஜீ ஸ்டூடியோ இன்டர்நேஷனல் மற்றும் பிரைம் மீடியா யூஎஸ் நிறுவனங்களுடன் இணைந்து G1G2 இன்டர்நேஷனல் என்ற நிறுவனம்வெளியிடுகிறது. அமெரிக்காவில் ஆகஸ்ட் 7ம் தேதி பிரிமியர் காட்சிகளுடன் வெளியாக உள்ள இந்தப் படம் அமெரிக்க ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என
எதிர்பார்க்கப்படுகிறது

அஜித், வித்யாபாலன், ஷராதா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடச்சலம், ஆண்ட்ரியா தரங், பிரகாஷ்ராஜ், மஹேஷ் மஞ்சுரேக்கர், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவில் கோகுல் சந்திரன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது