அசராமல் முத்தம் தந்தே அலங்காரம் செய்ய வேண்டும்: 'அகலாதே' பாடல் வரிகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற 'அகலாதே' பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. அருமையான, மனதை வருடும் மெல்லிய காதல் பாடலான இந்த பாடலின் வரிகளை தற்போது பார்ப்போம்
நடைபாதை பூவனங்கள் பார்த்து
நிகழ்கால கனவுகளில் பூத்து
ஒரு மூச்சின் ஓசையிலே
ஒன்றாய் வாழ்ந்திருப்போம்
உள்ளங் கைகளை கோர்த்து
கைரேகை மொத்தமும் சேர்த்து
சில தூரப் பயணங்கள்
சிறகாய் சேர்ந்திருப்போம்
அகலாதே அகலாதே
நொடி கூட நகராதே
செல்லாதே செல்லாதே
கணம் தாண்டி போகாதே
நகராமல் உன் முன் நின்றேன்
பிடிவாதம் செய்ய வேண்டும்
அசராமல் முத்தம் தந்தே
அலங்காரம் செய்ய வேண்டும்
நடைபாதை பூவனங்கள் பார்த்து
நிகழ்கால கனவுகளில் பூத்து
ஒரு மூச்சில் ஓசையிலேயே
ஒன்றாய் வாழ்ந்திருப்போம்
உள்ளங் கைகளை கோர்த்து
கைரேகை மொத்தமும் சேர்த்து
சில தூர பயணங்களில்
சிறகாய் சேர்ந்திருப்போம்
நீ எந்தன் வாழ்வில் மாறுதல்
என் இதயம் கேட்ட ஆறுதல்
மடி சாயும் மனைவியே
பொய்க்கோபப் புதல்வியே
நடு வாழ்வில் வந்த உறவு நீ
நெடுந்தூரம் தொடரும் நினைவு நீ
இதயத்தின் தலைவி நீ
பேரன்பின் பிறவி நீ
என் குறைகள் நூறை மறந்தவள்
எனக்காக தன்னை துறந்தவள்
மனசாலே என்னை மணந்தவள்
அன்பாலே உயிரை அளந்தவன்
உன்வருகை என் வரமாய் ஆனதே
நடைபாதை பூவனங்கள் பார்த்து
நிகழ்கால கனவுகளில் பூத்து
ஒரு மூச்சில் ஓசையிலேயே
ஒன்றாய் வாழ்ந்திருப்போம்
உள்ளங் கைகளை கோர்த்து
கைரேகை மொத்தமும் சேர்த்து
சில தூர பயணங்களில்
சிறகாய் சேர்ந்திருப்போம்
சிறகாய் சேர்ந்திருப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments