செம ஸ்மார்ட் லுக்கில் அஜித்.. 'ஏகே 62' பட கெட்டப்பா?

  • IndiaGlitz, [Thursday,March 09 2023]

அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் அந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்

அஜித் சென்னை விமான நிலையத்திற்கு இன்று வந்து இறங்கிய நிலையில் அவருடன் ரசிகர்கள் சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர். இந்த புகைப்படத்தில் அஜித் செம ஸ்மார்டாக உள்ளார் என்பதும் அவரது ஸ்டைலிஷை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்

மீண்டும் பெப்பர் சால்ட் கெட்டப்பில் கூலிங் கிளாஸ் கண்ணாடியோடு அஜித் செம ஸ்டைலிஷ் ஆக இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். அஜித்தின் செம ஸ்டைலை பார்த்து இதே கெட்டப்பில் அவர் ’ஏகே 62’ படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் அஜித் நடிக்க இருக்கும் ’ஏகே 62 படத்தின் அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் இருந்து தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.