பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகும் அஜித் படம்.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!

  • IndiaGlitz, [Tuesday,November 19 2024]

அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் அஜித்தின் ’விடாமுயற்சி’ அல்லது ’குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் ஒன்று வெளியாகும் என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது ’குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியாவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதே இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து அவ்வப்போது புரமோஷன் போஸ்டர்கள் வெளியான போதெல்லாம் பொங்கல் ரிலீஸ் என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், திடீரென ’விடாமுயற்சி’ திரைப்படம் தான் பொங்கல் தினத்தில் வரும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், பிரபல விநியோகஸ்தர் ஒருவரிடம் ‘குட் பேட் அக்லி’ படத்தின் தயாரிப்பு தரப்பு பொங்கல் ரிலீஸ் என்பதை உறுதி செய்துள்ளதாகவும், இதையடுத்து பொங்கல் தினத்தில் இந்த திரைப்படம் வெளியாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘விடாமுயற்’சி திரைப்படம் மே ஒன்றாம் தேதி அஜித்தின் பிறந்த நாளில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், ராகுல் தேவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

More News

சிவகார்த்திகேயனின் இமாலய வளர்ச்சி.. முதல் 300 கோடி ரூபாய் வசூல் படம்..!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்' திரைப்படம் 300 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுவது திரை உலகை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீரியல் முடிந்ததும் கர்ப்பமான 'சுந்தரி' நடிகை.. குவியும் வாழ்த்துக்கள்..!

சன் டிவியில் ஒளிபரப்பான 'சுந்தரி' சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் முடிவடைவதாக கூறப்படும் நிலையில், அந்த தொடரில் நடிக்கும் முக்கிய நடிகை ஒருவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

15 ஆண்டுகால பாய்ஃபிரண்டை மணக்கிறார் கீர்த்தி சுரேஷ்.. திருமணம் எப்போது?

நடிகை கீர்த்தி சுரேஷ் 15 ஆண்டுகாலம் பழகிய பாய் பிரண்டை திருமணம் செய்ய போவதாகவும், அடுத்த மாதம் இந்த திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

என் பெற்றோரை பெருமையில் நெகிழ்வடைய செய்தவர் நீங்கள்: அருண் விஜய் எழுதிய கடிதம்..!

என் பெற்றோரை பெருமையில் நெகிழ்வடைய செய்தவர் நீங்கள் என பிரபல இயக்குனருக்கு நடிகர் அருண் விஜய் நெகிழ்ச்சியுடன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

பிறந்தநாளில் ரசிகர்களுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ்: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்..!

நடிகை நயன்தாரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் போது, அவருடைய புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கிடைத்துள்ளது.