நாளையுடன் முடியும் 'குட் பேட் அக்லி' படப்பிடிப்பு.. அஜித்தின் அடுத்த திட்டம் இதுவா?

  • IndiaGlitz, [Saturday,November 23 2024]

அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது வெளிநாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாளையுடன் இந்த ஷெட்யூல் முடிவடையும் எனவும், அதன் பின்னர் அஜித்தின் திட்டம் என்ன என்பதை பற்றிய தகவல் கசிந்து வருகிறது.

அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ’விடாமுயற்சி’, மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். 'விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது.

அதேபோல், ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்தது. இதில் அஜித் , த்ரிஷா உள்ளிட்ட நடிகர்கள் கலந்து கொண்டனர். தற்போது, இந்த ஷெடியூல் நாளையுடன் முடிவடைய உள்ளது.

இதனை தொடர்ந்து, அஜித் தனது கார் ரேஸ் மீது கவனம் செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் ஐரோப்பாவில் நடைபெறும் கார் ரேஸில் கலந்து கொள்ள உள்ளதால், அஜித் மற்றும் அவரது அணியினர் அந்த போட்டிக்காக பயிற்சி மேற்கொள்வதாக தெரிகிறது.

இந்த நிலையில் ‘குட் பேட் அக்லி’ படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. ’விடாமுயற்சி’ திரைப்படம் கோடை விடுமுறையிலோ, அல்லது அஜித்தின் பிறந்த நாளிலோ வெளியாகும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

More News

அட்லியின் அடுத்த படத்தில் கமல் அல்லது ரஜினி? ஹீரோ யார்? தமிழ் தயாரிப்பு நிறுவனம்.

அட்லியின் அடுத்த படத்தில் கமல்ஹாசன் அல்லது ரஜினிகாந்த் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும், பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும்

வெப் சீரிஸாக மீண்டும் வரும் 'ஆஃபீஸ்' தொடர், ஹாட்ஸ்டாரில் விரைவில்!!

'இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தமிழ் தொலைக்காட்சியின் மிகவும் ரசிக்கப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்றான 'ஆபீஸ்' தொடரை, முழு அளவிலான வெப் சிரீஸாக விரைவில், வெளியிடவுள்ளது.

தயவுசெய்து வேண்டாம்.. படிக்கும் போது மனம் உடைகிறது: ஏ.ஆர்.ரஹ்மான் மகன் அமீன்

எனது தந்தை பற்றிய பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம். அதை படிக்கும் போது எனது மனம் உடைகிறது என்று ஏ.ஆர்.ரஹ்மான் மகன் அமீன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

கவின் படத்தில் இருந்து திடீரென விலகிய அனிருத்.. மாற்று இசையமைப்பாளர் யார்?

நடிகர் கவின் நடிக்கும் அடுத்த படத்தில் அனிருத் இசையமைப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது திடீரென அவர் அந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது.

நாக சைதன்யா வீட்டுக்கு மருமகள் ஆகிறாரா மீனாட்சி செளத்ரி?  அவரே அளித்த விளக்கம்..!

விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தில் நடித்த நடிகை மீனாட்சி சவுத்ரி, நாக சைதன்யா உறவினர் வீட்டிற்கு மருமகளாக போவதாக வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதுதொடர்பாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.