close
Choose your channels

இன்று அஜித்தின் 'குட் பேட் அக்லி' அப்டேட்.. சுரேஷ் சந்திராவின் அதிரடி அறிவிப்பு..!

Thursday, June 27, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்து வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதும் முதல் கட்ட படப்பிடிப்பை முடிந்தவுடன் அஜித் தற்போது ’விடாமுயற்சி’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் சென்று உள்ளார் என்பதும் தெரிந்தது. அனேகமாக அவர் ஜூலை இறுதியில் சென்னை திரும்பிய பின்னர் அடுத்த கட்டமாக ’குட் பேட் அக்லி’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே ’குட் பேட் அக்லி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலான நிலையில் இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் என்றும் மாலை 6.40 மணிக்கு வெளியாகும் என்று அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைத்தளத்தில் அதிரடியாக அறிவித்துள்ளதை அடுத்து அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இன்று மாலை செகண்ட் லுக் போஸ்டர் வெளியானதும் இணையதளமே ஸ்தம்பிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மேலும் ’குட் பேட் அக்லி’ படத்தில் அஜித்தை தவிர மற்ற நட்சத்திரங்கள் குறித்த எந்த தகவலும் இல்லாத நிலையில் இன்றைய அப்டேட்டில் சில முக்கிய தகவல்கள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.