இன்று அஜித்தின் 'குட் பேட் அக்லி' அப்டேட்.. சுரேஷ் சந்திராவின் அதிரடி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Thursday,June 27 2024]

அஜித் நடித்து வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதும் முதல் கட்ட படப்பிடிப்பை முடிந்தவுடன் அஜித் தற்போது ’விடாமுயற்சி’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் சென்று உள்ளார் என்பதும் தெரிந்தது. அனேகமாக அவர் ஜூலை இறுதியில் சென்னை திரும்பிய பின்னர் அடுத்த கட்டமாக ’குட் பேட் அக்லி’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே ’குட் பேட் அக்லி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலான நிலையில் இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் என்றும் மாலை 6.40 மணிக்கு வெளியாகும் என்று அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைத்தளத்தில் அதிரடியாக அறிவித்துள்ளதை அடுத்து அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இன்று மாலை செகண்ட் லுக் போஸ்டர் வெளியானதும் இணையதளமே ஸ்தம்பிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மேலும் ’குட் பேட் அக்லி’ படத்தில் அஜித்தை தவிர மற்ற நட்சத்திரங்கள் குறித்த எந்த தகவலும் இல்லாத நிலையில் இன்றைய அப்டேட்டில் சில முக்கிய தகவல்கள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

'கல்கி 2898 ஏடி'.. கமல் மட்டுமல்ல.. சிறப்பு தோற்றத்தில் 5 பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா?

பிரபாஸ் நடித்த 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்ததால் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும்

இதை மட்டும் செய்யாதீங்க: ரிலீசுக்கு முன் 'கல்கி' குழுவினர் வெளியிட்ட உருக்கமான வேண்டுகோள்..!

பிரபாஸ் நடித்த 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் தமிழ் தெலுங்கு உள்பட ஐந்து மொழிகளில் வெளியாகி உள்ள நிலையில் வெளிநாடுகளில் இந்த படத்தை பார்த்தவர்கள்

கிளிம்ப்ஸ் வீடியோவை அடுத்து டீசர்.. 'கோட்' படம் குறித்த மாஸ் தகவல்..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ அவரது பிறந்தநாள் விருந்தாக வெளியாகி இணையத்தில் வைரல் ஆன நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் தயாராகி விட்டதாக

2வது திருமணத்திற்கு முன் நடிகை வைத்த பேச்சிலர் பார்ட்டி.. அதுவும் தனி விமானத்தில்..!

ரஜினிகாந்த், விஜய், விக்ரம், தனுஷ், ஆர்யா உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த நடிகை விரைவில் இரண்டாவது திருமணம் செய்ய இருக்கும் நிலையில் தனது நண்பர்கள் மற்றும் தோழிகளுக்கு தனி

வேற லெவலில் ரஜினியின் லுக்.. லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த 'கூலி' புகைப்படம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'கூலி' படத்தின் ரஜினிகாந்த் லுக் டெஸ்ட் குறித்த புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ்thal