அஜித்தின் 'குட் பேட் அக்லி' பர்ஸ்ட் லுக் வெளியாக இந்த 700 பேர் காரணமா? ஆச்சரிய தகவல்..!

  • IndiaGlitz, [Tuesday,May 21 2024]

அஜித் நடித்து வரும் ’குட் பேட் அக்லி’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் இப்போது வெளியிட படக்குழுவினர் திட்டமிடவில்லை என்றும் ஆனால் திடீரென இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதற்கு 700 பேர்கள் தான் காரணம் என்றும் தகவல் வெளியாகி உள்ளன.

’குட் பேட் அக்லி’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் அஜித்தின் ஆக்சன் காட்சிகளை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் படமாக்கிய நிலையில் இந்த படத்தின் செட் அமைக்க மற்றும் ஸ்டண்ட் காட்சிகளில் பங்கேற்க 700 ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்களுடைய உதவியால்தான் இந்த ஸ்டண்ட் காட்சி சிறப்பாக படமாக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் இந்த காட்சிக்காக வேலை செய்த 700 ஊழியர்கள் அஜித்துடன் செல்பி எடுக்க விருப்பப்பட்டதாகவும், ஆனால் இயக்குனர் அதற்கு அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அஜித் முக்கியமான கெட்டப்பில் இருக்கும் போது செல்பி எடுத்தால் அந்த புகைப்படம் லீக் ஆகிவிடும் என்று கூறிய நிலையில் தான் அஜித் உடனடியாக பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு விடுங்கள் அப்போது இவர்களுடன் செல்பி எடுத்தால் பிரச்சனை இருக்காதே என்று கூறியதாகவும் இதனை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட முடிவு செய்ததாகவும் தெரிகிறது.

அந்த வகையில் 700 பேர் தன்னுடன் செல்பி எடுக்க விருப்பப்பட்ட நிலையில் அவர்கள் ஏமாற்றம் அடையக் கூடாது என்பதற்காகவே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகி உள்ளதாக தெரிகிறது.

More News

காதலிக்க நேரமில்லை தொடரில் நடித்த சந்திராவின் ரீ-என்ட்ரி

தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் தொடரில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.இது இவரது ரசிகர்கள் பலருக்கும் உற்சாகத்தை கொடுத்துள்ளன...

என்னது சந்திரமுகி படத்தில் கங்கா கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது சிம்ரனா ?

சந்திரமுகி படத்தில் கங்கா கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது சிம்ரன் என தெரிய வந்துள்ளது.சில பல காரணங்களால் அவர் அந்த படத்தில் நடிக்கவில்லை என்ற செய்தி கசிந்துள்ளது...

ஜெய் பட நடிகைக்கு ஆண் குழந்தை.. என்ன பெயர் தெரியுமா?

நடிகர் ஜெய் நடித்த திரைப்படத்தில் நாயகியாக நடித்த நடிகைக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில் இது குறித்த தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளதோடு, குழந்தையின் பெயரையும்

சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!

சிவகார்த்திகேயன் படம் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்ட நிலையில் இது குறித்த பதிவை அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

ரிலீசுக்கு தயாரான விஜய் ஆண்டனியின் அடுத்த படம்.. புதிய போஸ்டருடன் முக்கிய அப்டேட்..!

விஜய் ஆண்டனி நடித்த 'ரோமியோ' என்ற திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான நிலையில் தற்போது அவர் ஐந்து படங்களில் நடித்து வருகிறார். இதில் ஒரு படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டீசர் ரிலீஸ்