விஜய்யை பார்த்து பொறாமைப்பட்ட அஜித்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களாகிய அஜித்-விஜய் ஆகிய இருவரும் பர்சனலாக நெருங்கிய நண்பர்கள் என்றாலும் தொழில் ரீதியாக கடுமையான போட்டியை உள்ளவர்கள். இருவரும் மாறி மாறி வெற்றிப்படங்கள் கொடுப்பதில் தீவிர முயற்சிகளை எடுப்பார்கள்
இந்த நிலையில் தனக்கு அமையாத ஒன்று விஜய்க்கு மட்டும் அடிக்கடி தானாகவே அமைந்து விடுவதாக பாடகி சுசித்ராவிடம் அஜித் கூறியதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த பாடகி சுசித்ரா ‘தன்னிடம் தான் பாடிய பாடல் குறித்து ஒரே ஒரு நடிகர் மட்டுமே கருத்து கூறியதாகவும், அவர் ‘தல’ என்றும் கூறியுள்ளார். நான் பாடிய ‘ஒரு சின்னத்தாமரை’ என்ற பாடலை அவர் கேட்டு, விஜய்க்கு மட்டும் எப்படி இது மாதிரி நல்ல நல்ல பாடலாக அமைகிறது என்றும் தனக்கு இது மாதிரி பாடல் அமையவில்லை என்றும் ’எனக்கு ரொம்ப பிடித்த பாடல் இது’ என்றும் பொறாமையுடன் கூறியதாகவும் பாடகி சுசித்ரா அந்த பேட்டியில் கூறியுள்ளார்
அஜீத்தே பொறாமைப்படும் அளவுக்கு விஜய்யின் அனைத்து படங்களிலும் சூப்பராக பாடல்கள் அமைந்து விடுவது என்பது ஆச்சரியமான ஒன்றுதான். விஜய்யின் ஒருசில படங்கள் தோல்வி அடைந்தாலும் அந்த படங்களின் பாடல்கள் ஹிட்டாகும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments