'தல' அஜித்தின் வெறித்தனமான ரசிகர் திடீர் தற்கொலை!

  • IndiaGlitz, [Wednesday,February 24 2021]

தல அஜித்தின் வெறித்தனமான ரசிகர் ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட தகவல் அஜித் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவராகிய அஜித்துக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அஜித்தின் வெறித்தனமான ரசிகர்களில் ஒருவர் பிரகாஷ். இவர் தன்னுடைய பெயரையே ’தல பிரகாஷ்’ என்றுதான் மாற்றிக்கொண்டார்.

அது மட்டுமன்றி இவரது கை, இடுப்பு உள்பட பல பகுதிகளில் அஜீத்தின் டாட்டூவை வரைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு வெறித்தனமான அஜித் ரசிகராக இருந்த பிரகாஷ், இன்று திடீரென தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த அஜித் ரசிகர்கள் அவருடைய மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தல அஜித்தின் வெறித்தனமான ரசிகர் ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.